திருமண நிகழ்ச்சிக்காக அரசுப் பேருந்தை வாடகைக்கு எடுத்துச் சென்றபோது விபத்து..7 பேர் உயிரிழப்பு..!!
ஆந்திர மாநிலத்தில் திருமண விழாவுக்கு சென்ற அரசு பேருந்து பாசன கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
பிரகாசம் மாவட்டத்திலுள்ள பொதிலியில் இருந்து 40 பேர் அரசுப் பேருந்து ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து காக்கிநாடாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
இரவு சுமார் ஒரு மணி அளவில் பேருந்து தாசரி அருகே உள்ள சாகர் பாசன கால்வாயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
Comments