சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
அரசு பள்ளி வளாகத்தில் பாம்பு கடித்து 7ம் வகுப்பு மாணவி காயம்...!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பாம்பு தீண்டி, 7ம் வகுப்பு மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒலக்காசி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அங்கு 7ம் வகுப்பு பயிலும் பூவிகா என்ற மாணவி, திங்கட்கிழமை காலை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற போது, அங்கிருந்த பாம்பு மாணவியின் காலில் தீண்டியதாக கூறப்படுகிறது.
அலறியடித்து வெளியே ஓடி வந்த மாணவியை ஆசிரியர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாணவிக்கு விஷமுறிவு மருந்து செலுத்தப்பட்டதாகவும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments