திமுக நிர்வாகி இல்ல விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய எம்.எல்.ஏ..!!

0 1645

கடலூர் அருகே நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல விழாவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கடலூர் - புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த திமுக நிர்வாகி மணிவண்ணனின் இல்ல விழா அங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக கடலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் சென்றனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீவைத்து தூக்கி உள்ளே வீசியதில் பறந்து வந்து தரையில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனை அடுத்து போலீசார் அய்யப்பனை பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பெட்ரோல் குண்டு வீசியது யார்?, எம்.எல்.ஏ.வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments