பிரபல நகைக் கடை ஒன்றில் நுழைந்த நிர்வாண சாமியார்.... ஒரு சவரன் தங்க நகையும், வழிச்செலவுக்கு கையில் பணமும் பெற்றுச் சென்றார்...!

0 3044

தென்காசி சங்கரன்கோயில் அருகே பிரபல நகைக் கடை ஒன்றில் நுழைந்த நிர்வாண சாமியார், கடை உரிமையாளரை ஆசிர்வதித்துவிட்டு ஒரு சவரன் தங்க நகையை பெற்றுச் சென்றார்.

மகந்த் அசோக் கிரி என்ற அந்த சாமியார் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வருவதாகவும், 30 நாள் புனித யாத்திரையாக தமிழகம் வந்தததாகவும் கூறப்படுகிறது சங்கரன்கோயில் வந்தபோது, ராஜபாளையம் முதன்மைச் சாலையில் இயங்கி வரும் நகைக் கடையை கண்டு அவர் உள்ளே சென்றார். இதைப் பார்த்து சாமியாரிடம் ஆசி பெறுவதற்காக ஏராளமானோர் கடையின் முன்பு திரண்டனர்.

கடவுள் ஆசீர்வாதம் செய்யச் சொல்லி அனுப்பியதாக கூறிய அந்த நபர், கழுத்தில் அணிவதற்கு ஒரு தங்க செயின் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

உடனே கடை உரிமையாளர் ஒரு சவரன் மதிப்புள்ள தங்க செயினை கொடுப்பதற்காக எடுத்தபோது, அது வேண்டாம் என்றும், அதைவிட பெரிய செயின் வேண்டும் என்றும் சாமியார் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஒரு சரவன் செயினையும் வழிச்செலவுக்கு பணத்தையும் கொடுத்து கடைக்காரர் அந்த சாமியாரை வழியனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments