உயர்நீதிமன்ற கிளை கலைஞர் போட்ட பிச்சை என்று கூறியதற்கு வருத்தம் - அமைச்சர் எ.வ.வேலு

உயர்நீதிமன்ற மதுரை கிளை கலைஞர் போட்ட பிச்சை என்று மதுரைக் கூட்டத்தில் தாம் பேசியதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கலைஞர் நூற்றாண்டு விழா கூட்டத்தில், உணர்ச்சி வயப்பட்ட நிலையில் தாம் பேசிய வார்த்தையை வாபஸ் பெறுவதோடு, வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
முன்னதாக, கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிகள், டி.எம்.செளந்தரராஜன் சிலை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை, அமைச்சர்கள் எ.வ. வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
Comments