இந்தியாவில் உயர்தர சர்வர்களை தயாரிக்கிறது எச்.பி. நிறுவனம்... விவிடிஎன் நிறுவனத்துடன் அமெரிக்காவின் எச்.பி. நிறுவனம் ஒப்பந்தம்...!

இந்தியாவில் VVDN நிறுவனத்துடன் இணைந்து உயர்தர சர்வர்களைத் தயாரிக்க அமெரிக்க பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HP ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தையடுத்து இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவுள்ளதாக மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
முக்கிய துறைகளில் அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சர்வர்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முதல் 5 ஆண்டுகளில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சர்வர்களைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.
Comments