வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை என கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் அமளி

தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை என கூறி சட்டப்பேரவையில் பா.ஜ.க.வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை என கூறி சட்டப்பேரவையில் பா.ஜ.க.வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. அதில் ஒன்றான அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
ஆட்சி பொறுப்பேற்றதும் மத்திய அரசிடம் இருந்து போதிய அரிசி கிடைக்கவில்லை எனக்கூறி அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக கூறி பாஜகவினர் பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments