எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கர்நாடகா சென்றால் "கோ பேக் ஸ்டாலின்" என கருப்பு பலூன் விடுவோம் - அண்ணாமலை

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடகா சென்றால், அவர் திரும்பி வரும்போது கோ பேக் ஸ்டாலின் என கருப்பு பலூன் விடுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது விவகாரத்தில் காங்கிரசையோ, துணை முதலமைச்சர் டிகே.சிவக்குமாரையோ கண்டிக்க ஸ்டாலினுக்கு மனமில்லை என்றார்.
டிகே.சிவக்குமாரை கேள்வி கேட்க முடியவில்லை என்றால் இத்தனை திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் எதற்காக இருக்கிறீர்கள எனக் கேள்வி எழுப்பிய அண்ணாமலை, மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன என்று கார்கேவை சொல்ல வையுங்கள் பார்க்கலாம் என்றும் சவால் விடுத்தார்.
Comments