தலகோணா அருவி தடாகத்தில் குதித்த கல்லூரி மாணவர் பாறை இடுக்கில் சிக்கி மூச்சுத்திணறி பலி...!

0 3249

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே தலகோணா அருவி தடாகத்தில் குளிப்பதற்காக குதித்த சென்னை கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சென்னையில் தங்கி கல்லூரியில் படித்து வந்த திருப்பதியைச் சேர்ந்த மாணவர் சுமந்த், விடுமுறையையொட்டி நண்பர்களுடன் தலகோணா அருவிக்கு சென்றுள்ளார்.

செல்போனில் வீடியோ எடுக்கச் சொல்லி விட்டு தடாகத்தில் குதித்த போது பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பாறை இடுக்கில் சிக்கி மூச்சுத்திணறி சுமந்த் உயிரிழந்திருப்பதை கண்டறிந்த மீட்புக்குழுவினர் சடலத்தை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments