பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மெய்நிகர் மாநாட்டில் பங்கேற்க்கும் சீன அதிபர் ஜின்பிங்..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், காணொலி வாயிலாக நடைபெறும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார்.
பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கவுன்சிலின் 23-வது கூட்டம் ஜூலை 4-ம் தேதி நடைபெறுகிறது.
2017ஆம் ஆண்டு இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆன நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், காணொலி முறையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் காணொலி காட்சி மூலம் ஜி ஜின்பிங் பங்கேற்று முக்கிய கருத்துகளை தெரிவிப்பார் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் (Hua Chunying) தெரிவித்துள்ளார்.
Comments