வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ராகுல் காந்தி பயணம்..!

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ராகுல் காந்தி 2 நாட்கள் பயணமாக சென்றுள்ளார்.
சுராசந்த்பூர் என்ற ஊரில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை நேரில் சந்திக்க அவர் புறப்பட்டு சென்றார். தலைநகர் இம்பாலில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிஷ்ணுபூர் என்ற இடத்தில் ராகுலின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். வன்முறை பாதித்த பகுதிகளுக்கு ராகுல் சென்றால், மீண்டும் பிரச்சனை ஏற்படும் என்று கூறிய போலீசார், அவரை இம்பால் திரும்பி செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது போலீசாருடன் காங்கிரசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ராகுல் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தியதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Comments