போலீஸ்லாம் அப்பா மாதிரி... வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுக்கலாம்ல...! ஒரு மதுப்பிரியரின் ஆதங்கம்

0 1631
போலீஸ்லாம் அப்பா மாதிரி... வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுக்கலாம்ல...! ஒரு மதுப்பிரியரின் ஆதங்கம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்துக்கு மது போதையில் இருசக்கரவாகனம் ஓட்டி வந்த ஆசாமியிடம் இருந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்யாமல் , பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தததாக சர்ச்சை உண்டாகி உள்ளது. அப்பா மாதிரி என்று போலீசுக்கு ஐஸ் வைத்த மதுப்பிரியரின் அட்ராசிட்டி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு இரவு நேரத்தில் டூவீலரில் வேகமாக வந்த போதை ஆசாமி ஒருவர், இன்ஸ்பெக்டர் வாகனத்தை நிறுத்தும் இடத்தில் தனது இரு சக்கர வண்டியை நிறுத்தியதாகத் தெரிகிறது.

அங்கிருந்த போலீஸார் அவரது அவசரத்தைப் பார்த்து என்னவோ ஏதோவென நினைத்து விசாரித்த போது, தன்னையும், தன் வண்டியையும் போலீசார் தான் காப்பாற்ற வேண்டுமென கூறியுள்ளார். யாரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் ? என்ன நடந்தது ? என போலீஸார் கேட்டதற்கு, தான் குட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்தவர் என்றும், தன் மாமாவிற்கு போன் செய்து தருவதாகவும் சம்பந்தமே இல்லாமல் பேசியதாக கூறப்படுகிறது.

வந்தவர் மது போதையில் இருக்கிறார் என்பதை தெரிந்துக் கொண்ட போலீஸார் அவரை அங்கிருந்து அனுப்பி வைப்பதில் முனைப்புக்காட்டினர். ஆனால், அவரோ, அங்கிருந்து செல்லாமல் டூவீலரை வெளியே எடுப்பதும், மற்றொரு இடத்தில் நிறுத்துவதுமாக இருந்தார்.

இவற்றையெல்லாம் பார்த்து டென்ஷனாகி மதுப்பிரியரை நோக்கி ஆவேசமான உதவி ஆய்வாளர் ஒருவரை மற்றொரு காவலர் சமாதானப்படுத்தும் நிலை ஏற்பட்டது.

ஒரு வழியாக அந்த நபர் புறப்பட முடிவெடுத்து டூவீலரை ஸ்டார்ட் செய்த போது, அது ஸ்டார்ட் ஆகவில்லை. உடனே, அங்கிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து கொஞ்சம் ஸ்டார்ட் செய்து கொடுக்கலாம்ல என்றார், போதை ஆசாமி. நீங்கெல்லாம் பெற்ற அப்பன் மாதிரி உதவி செய்யனும் என போலீசாருக்கு அறிவுரை கூறிய அவர், ஸ்டார்ட் ஆகாமல் நான் எப்படி போவது என கேள்வி கேட்டார்.

நான் ரொம்ப நேரமா தவிச்சுக்கிட்டு இருக்கேன்... நீங்க பொசுக்குன்னு போன்னு சொல்றீங்க.. காலக் கொடுமையா இருக்கே என ஆதங்கப்பட்டார் அந்த போதை ஆசாமி. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த போலீஸார், நீ கிளம்புப்பா.. எதுவானாலும் காலையில் பேசிக்கலாம் என்று சமாதனப்படுத்தி பெயர் சொல்லாத அந்த போதை ஆசாமியை அனுப்பி வைத்தனர்.

மதுபோதையில் இருக்கிறார் என்பது தெரிந்திருந்தும் வாகனத்தை பறிமுதல் செய்யாமல், இந்த நபரை போலீஸார் வாகனத்துடன் அனுப்பி வைத்தது ஏன் ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments