மதுரை மெட்ரோ ரயில் பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

0 1341
மதுரை மெட்ரோ ரயில் பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஜூலை 15ம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.

திருமங்கலத்தில் இருந்து மதுரை ஒத்தக்கடை வரை 31கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த 8,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இன்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் பேட்டியளித்த அர்ஜூனன், திருமங்கலம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களை ஒருங்கிணைப்பது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் ரயில் நிலையம் அமைப்பது,  தோப்பூரில் 58 ஏக்கரில் பணிமனை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், மதுரை நகரப் பகுதியில் முடிந்தவரை கட்டிடங்கள் ஏதும் இடிக்கபடாமல் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments