புதிய திரைப்படம் எடுக்க எதற்காக அஞ்சுகிறார் இயக்குனர் வெற்றிமாறன்..?
முன்பெல்லாம் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டுமென்றால் தைரியமாக எடுத்துவிடுவேன் என்று தெரிவித்துள்ள இயக்குனர் வெற்றி மாறன், இப்போது யார் என்ன சொல்வார்களோ என்று நினைக்க வேண்டிய பயம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டையை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று இயக்குனர் வெற்றிமாறன் பேசினார். அப்போது,
யதாவது, நம்முடைய சொந்த பணத்தை செலவு செய்து மது அருந்துகிறோம். நாம் எந்த அளவுக்கு உடல் தகுதியாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு அது வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கும்.
எந்த அளவிற்கு உடலுக்கு காய்கறிகளை சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு அது உடலுக்கு நல்லது என்று மது அருந்துவோருக்கு அறிவுரைகூறிய வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்திற்கு ஒரு ரோபோட்டிக் காளையை செய்து வருகிறோம். சூர்யா வளர்க்கும் காளையை போன்று ஸ்கேன் செய்து ஒரு ரோபோவை உருவாக்கி வருகிறோம். என்றார்
விஜயுடன் படம் பண்ணுவது தொடர்பாக பலமுறை பேசிதான் வருவதாகவும், அவரும் தன்னிடம் படம் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்த வெற்றி மாறன் , சிலபேர் சமூக அக்கறையுடன் படம் எடுப்பார்கள் என்றும் சிலபேர் வேறு சில அக்கறையுடன் படம் எடுப்பார்கள் என்றும் தெரிவித்த வெற்றி மாறன், படம் பார்ப்பவர்களுக்கு அது எந்த ஒரு தூண்டுதலையும் ஏற்படுத்தாமல் இருந்தால் அதுவே சரியாக இருக்கும் என்றார்
முன்பெல்லாம் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டுமென்றால் தைரியமாக எடுத்துவிடுவேன் என்று கூறிய வெற்றி மாறன், இப்போது யார் என்ன சொல்வார்கள் என்று நினைக்க வேண்டிய எண்ணமும் , எப்படி புரிந்து கொள்வார்களோ என்ற பயமும் இருக்கிறது என்றார்
Comments