கோவில் விழாவில் முதல் மரியாதை அளிப்பதில் தகராறு : முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் வீடு புகுந்து தாக்குதல் - 5 பேர் காயம்

0 2556
கோவில் விழாவில் முதல் மரியாதை அளிப்பதில் தகராறு : முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் வீடு புகுந்து தாக்குதல் - 5 பேர் காயம்

மதுரை கருவனூரில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவிலில் கடந்த ஒரு வாரமாக உற்சவ விழா நடைபெற்றது. கோவிலில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக, முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான பொன்னம்பலம் தரப்புக்கும், அவரது உறவினரும் கருவனூர் திமுக கிளைச் செயலாளருமான வேல்முருகன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் தரப்பினர், பொன்னம்பலத்தின் வீடு புகுந்து அவரது காருக்கு தீ வைத்ததோடு, கல் வீசி, வீட்டிலிருந்த டி.வி, பைக் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பொன்னம்பலத்தின் உறவினர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான வேல்முருகன் தரப்பினரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments