பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி நைல்' விருது....!

0 1620

பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி நைல்' விருது வழங்கப்பட்டது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி, அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி சந்திப்பு நடைபெற்றது. கெய்ரோ அதிபர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி வாயிலுக்கு வந்து வரவேற்றார்.

பிரதமர் மோடி,அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி இடையேயான சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

எகிப்து அரசின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி நைல்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி விருதை வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக இன்று காலை ஹெலியோபோலிஸ் போர் நினைவுச் சின்னத்திற்கு சென்ற பிரதமர், முதலாம் உலகப்போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்காக அங்கு வைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கெய்ரோவில் உள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான அல்-ஹக்கீம் மசூதியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இந்தியாவிலுள்ள தாவூதி போரா சமூகத்தவரின் நிதி உதவியுடன் அல்-ஹக்கீம் மசூதி அண்மையில் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments