பாஜகவினர் தங்களைப் பற்றி அவதூறு பரப்புவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் புகார்..!

0 1534

அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் திட்டமிட்டு தங்களைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி வருவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை வினேஷ் போகட் , பாலியல் வழக்கில் பாஜக எம்பி பிரிஜ் பூஷணை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களில் ஒருவர்.

பாஜக நிர்வாகியான யோகேஷ்வரன் மல்யுத்த வீராங்கனைகளைக் குறித்து அவதூறு பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் வீரர்கள், வீராங்கனைகளில் ஆறு பேருக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

தாங்கள் அரசிடம் எந்த சலுகையும் கோரவில்லை என்றும் அப்படி நிரூபித்தால் விளையாட்டுத் துறையை விட்டு விலகத்தயார் என்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments