திருப்பதி மலையில் ஐந்து வயது சிறுவனை கவ்வி தூக்கி சென்ற சிறுத்தை குட்டி பிடிபட்டது....!

திருப்பதி மலைக்கு பாத யாத்திரை செல்லும் வழியில் சிறுவனை தாக்கிய சிறுத்தைக்குட்டி, வனத்துறை வைத்த கூண்டில் பிடிபட்டது.
திருப்பதி மலைக்கு வியாழன் இரவில் தனது குடும்பத்தினருடன் நடந்து சென்று கொண்டிருந்த 5 வயது சிறுவனை, ஒன்றரை வயது சிறுத்தைக் குட்டி ஒன்று பாய்ந்து வந்து தூக்கிச் சென்றது.
சுமார் 500 அடி தூரம் சிறுவனை இழுத்துச் சென்ற நிலையில், அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் ராட்சத விளக்கின் மூலம் சிறுத்தை மீது வெளிச்சத்தை பாய்ச்சினார்.
உடனே சிறுவனை விட்டுவிட்டு சிறுத்தை தப்பி ஓடியது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில், சிறுத்தை குட்டியை பிடிக்க வனத்துறையினர் 3 கூண்டுகளை அமைத்தனர்.
அதில் ஒரு கூண்டில் பிடிபட்ட சிறுத்தை குட்டியை, வேறு பகுதிக்கு கொண்டுசென்று விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Comments