ஆதிபுருஷ் படத்தை திரையரங்குகளில் இருந்து நீக்க உரிமையாளர்கள் முடிவு..!

ஆதிபுருஷ் படம் இனி திரையிடப்படாது என மும்பை திரைப்பட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமன், அனுமன், ராவணன் போன்ற புராணப் பாத்திரங்களை அவமதிக்கும் வகையில் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்ததால் படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
கட்டணம் குறைக்கப்பட்ட பின்னரும் திரையரங்குகள் வெறிச்சோடியே காணப்பட்டன. இதனால் படம் திரையிடப்படுவது ஓரிரு நாட்களில் நிறுத்தப்படும் என மும்பை மராத்தா மந்திர் திரையரங்கு நிர்வாகி மனோஜ் தேசாய் தெரிவித்துள்ளார்.
Comments