கோவையில் தனியார் பேருந்தை இயக்கி வந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம்..!

0 4955

கனிமொழி எம்.பி. பயணம் செய்த சில மணி நேரத்தில், தாம் பணியாற்றி வந்த பேருந்து நிறுவனம் தம்மை பணிநீக்கம் செய்துவிட்டதாக கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா கூறியுள்ளார்.

கோவை காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை ஷர்மிளாவின் பேருந்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பயணம் செய்தார்.

இந்த பயணத்தின் போது கனிமொழியின் உதவியாளரிடம் பேருந்தின் பெண் நடத்துநர் அன்னத்தாய் கடுமையாக நடந்துக் கொண்டதாகக் கூறி, அவர் மீது புகார் தெரிவிப்பதற்காக ஷர்மிளா பேருந்து நிறுவன அலுவலகத்திற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த பேருந்து உரிமையாளருக்கும், ஷர்மிளா உடன் சென்ற அவரது தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதை தொடர்ந்து பேருந்து உரிமையாளர் தன்னை பணிநீக்கம் செய்ததாகவும் ஓட்டுநர் ஷர்மிளா தெரிவித்தார்.

ஷர்மிளாவின் தந்தை வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களை அங்கிருந்து கிளம்புமாறு மட்டுமே தாம் கூறியதாகவும், ஷர்மிளாவை பணிநீக்கம் செய்யவில்லை என்றும் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணன் கூறினார். வேண்டுமானால் ஷர்மிளா பணியை தொடரலாம் என்றார் அவர்.

கடந்த வாரம் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்து அவரை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments