இந்தியாவைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது - முதலமைச்சர்

இந்தியாவைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதிய திறந்த மடலில், ஜூன் 23-ஆம் நாள் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கருணாநிதியின் பிரதிநிதியாக தான் பங்கேற்பதாக கூறியுள்ளார்.
பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திடும் என்ற குறிப்பிட்டுள்ள அவர், இந்திய ஒருமைப்பாட்டு உணர்வையும் ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாப்பதற்கான முன்னெடுப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல விளைவைத் தரும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments