ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு... சர்சைக்குரிய வசனங்களை கண்டித்து திரையரங்கினருடன் வாக்குவாதம்...!

ஆதிபுருஷ் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பையில் ஆதிபுருஷ் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குக்கு சென்ற இந்து அமைப்பினர், படத்தை நிறுத்துமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஆதிபுருஷ் படம் ஓடிய திரையரங்கு முன்பு திரண்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் மும்பை போலீஸ் அவருக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
இதனிடையே, ஆதிபுருஷ் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி மற்றும் வசனங்களை நீக்க திரைப்பட தணிக்கை வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
Comments