எதிர்ப்பை மீறி காதலைத் தொடர்ந்ததால், மகள் - காதலனை கொலை செய்து முதலைகள் நிரம்பிய ஆற்றில் வீசிய தந்தை...!

0 2041

மத்திய பிரதேசத்தில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலைத் தொடர்ந்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை பெண்ணின் குடும்பத்தினர் சுட்டுக்கொன்று கயிற்றில் கட்டி முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொரேனா பகுதியை சேர்ந்த 18 வயதான ஷிவானி என்ற பெண் பலபு கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் என்ற இளைஞரை காதலித்து வந்தார். இதற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தும் இருவரும் தங்களது காதலை தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து காதலர்கள் இருவரும் மாயமாகினர்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது.

ஷிவானியின் தந்தையை பிடித்து விசாரித்த போது, இருவரையும் சுட்டுக் கொன்று அவர்களின் உடலில் கல்லைக் கட்டி, முதலைகள் நிறைந்த சம்பல் ஆற்றில் வீசியதாக கூறினார். உடல்களை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments