மொத்த நகை வியாபாரி மற்றும் பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்த நகைக்கடை அதிபர் கைது..!

ஆண்டிபட்டியில் மொத்த நகை வியாபாரி மற்றும் பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்ததாக நகைக்கடை அதிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த ஆபரணத் தங்க மொத்த வியாபாரி வீரமணிகண்டனை கடந்த 2020-ம் ஆண்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நகைக்கடை நடத்தி வந்த முருகபாண்டி தனது கடைக்கு அழைத்துள்ளார்.
அதன்படி அங்கு சென்ற வீர மணிகண்டனிடம் சுமார் 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.
நீண்ட நாட்களாகியும் நகைக்கான பணத்தை திருப்பித் தராததால் சந்தேகமடைந்த வீரமணிகண்டன், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது முருகபாண்டி இதேபோல பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பிறரையும் திரட்டி அழைத்துச் சென்று வீர மணிகண்டன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஆண்டிபட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த முருகபாண்டியை கைது செய்தனர்.
முருக பாண்டி கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரிடம் ஏமாந்ததாக இதுவரை 12 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர்.
தங்களிடம் முருகபாண்டி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments