பிரதமர் நரேந்திர மோடி நாளை அமெரிக்கா பயணம்..!

பிரதமர் மோடி நாளை அமெரிக்கா புறப்படுகிறார்.
21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள ஐநா.சபை தலைமையகத்தில் 180 நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.
22ம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார். இருதலைவர்களிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்தியா அமெரிக்கா உறவு மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஜோபைடன் மோடி ஒன்றாக பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து 24ம் தேதி மோடி எகிப்து செல்ல உள்ளார்
Comments