சென்னை அம்பத்தூர் அருகே அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் பலி

சென்னை அம்பத்தூர் அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கள்ளிக்குப்பத்தை சேர்ந்த ஜார்ஜ் மில்லர் என்பவர் அரக்கோணத்திலிருந்து காரில் சென்னை திரும்பியபோது விபத்து நேர்ந்துள்ளது.
காரை ஓட்டிய ஜார்ஜை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதிவேகமாக வந்ததால் ஜார்ஜால் காரை கட்டுப்படுத்த இயலாமல் போனதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments