ஆன்ட்டி வைரஸ் தடுப்பையும் ஊடுருவிச் செல்போனில் பரவும் வைரஸ் டாம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை...!

0 5328

செல்போனின் கால் லாக், கேமரா படங்கள் போன்றவற்றை ஹேக் செய்யக் கூடிய புதிய வைரஸ் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி, சைபர் பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் இருந்தாலும் அதனை ஊடுருவிச் செல்லக்கூடியது இந்த வைரஸ் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. Daam' என்ற பெயரில் ஆண்ட்ராய்டு மால்வேர் பரவி வருவதாக தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நம்பகத்தன்மை இல்லாத இணைய பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்பாடுகள் மூலம் இந்த வைரஸ் விநியோகிக்கப்படுகிறது.

தொலைபேசி அழைப்பு பதிவுகள், தொடர்புகள், கேமரா, சாதன கடவுச்சொற்களை மாற்றுதல், ஸ்கிரீன் ஷாட்களைப் படம்பிடித்தல், எஸ்எம்எஸ்களைத் திருடுதல், கோப்புகளைப் பதிவிறக்குதல்/பதிவேற்றுதல் போன்றவற்றைச் செய்யக்கூடியது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments