"கடந்த 9 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது" - பிரதமர் மோடி

0 1066

இந்திய விளையாட்டுத் துறையில் கடந்த 9 ஆண்டுகளில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 3வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார்.

வரும் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து 4 ஆயிரத்து 570 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் பலனாக தடகள வீரர்களுக்கு உலகத்தரமான் பயிற்சியும் சர்வதேச போட்டிகள் பலவற்றில் பங்கேற்க வாய்ப்புகளும் கிடைப்பதாகக் கூறினார்.

புதிய கல்விக் கொள்கையில் விளையாட்டை தனிப்பாடமாக எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments