சட்டீஸ்கர் பேரவை கட்டிடத்தை சோனியா திறந்து வைத்தது ஏன்? : நிர்மலா சீதாராமன்

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் தமிழக ஆதீனங்கள் 20 பேர் பிரதமரிடம் செங்கோல் வழங்குவார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் பேட்டியளித்த அவரிடம் குடியரசுத் தலைவர் திறந்து வைக்காதது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு, சத்தீஸ்கரின் புதிய சட்டமன்ற கட்டிடத்தை ஆளுநர் திறக்காமல் சோனியாகாந்தி திறந்தது ஏன் என்றும் அவர் வினவினார்.
பேட்டியின் போது உடனிருந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானாவின் புதிய தலைமைச் செயலக கட்டடத்தை முதலமைச்சர் தான் திறந்த வைத்ததாகவும், தமக்கு அழைப்பு கூட கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இந்த பேட்டியின் போது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நாகலாந்து ஆளுநர் இல. கணேசன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
Comments