குழந்தைகளை காரில் தவிக்கவிட்டு சென்ற பெற்றோர்.. பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை..

அமெரிக்காவில் காரில் தனியாக விட்டுச் செல்லப்பட்ட 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
ஃபுளோரிடாவை சேர்ந்த கத்ரீன் - கிறிஸ்டோபர் தம்பதி அளவுக்கு அதிகமான போதையில் தங்களது இரு குழந்தைகளை காரிலேயே மறந்து விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றதாக கூறப்படுகிறது.
காரில் சிக்கி இருந்த குழந்தைகளை 15 மணி நேரத்திற்கு பிறகு போதை தெளிந்து பார்த்த போது, 2 வயது குழந்தை உடல் வெப்பம் அதிகரித்ததால் உயிரிழந்தது. குழந்தைகளின் பெற்றோரை கொலை வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார், 4 வயதான மற்றொரு குழந்தையை காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
Comments