சகோதரியுடன் தகாத உறவு வைத்திருந்த இளைஞரை கொன்ற தம்பி.. கூட்டாளிகளுடன் அரெஸ்ட்..!

0 2608

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே திருமணமான தனது சகோதரியுடன் தகாத உறவு வைத்திருந்த இளைஞரை கொலை செய்ததாக தம்பி உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரியும் குணா என்பவர் கிராமப் புறங்களில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு வழங்கப்படும் கடனை வசூல் செய்து வந்தார். அப்போது, சூனாம்பேட்டையை சேர்ந்த சோபனா என்ற பெண்ணுடன், குணாவுக்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

சோபனாவின் தம்பி பாவலன் இதனைக் கண்டித்தும், உறவை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாவலன், கடந்த 19ஆம் தேதி சிலருக்கு கடன் தேவைப்படுவதாக கூறி குணாவை அழைத்து சென்று, தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்ததாக கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த குணாவின் செல்போனிலிருந்தே, ஆம்புலன்ஸிற்கு போன் செய்து, விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவித்துவிட்டு தப்பியுள்ளனர். இதனையடுத்து மீட்கப்பட்ட குணா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய போலீசார் பாவலன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து, தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments