ராணுவத்தின் நடமாட்டத்தைக் கண்காணித்து உளவு சொன்னவரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள்..!

ஜம்மு காஷ்மீரில் குப்வாராவில் ராணுவத்தின் நடமாட்டத்தைக் கண்காணித்து உளவு பார்த்த ஜெய்ஷே முகமது இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் முகமது உபைத் மாலிக் என்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதியை குப்வாரா மாவட்டத்தில் கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள், பாகிஸ்தானில் உள்ள அந்த இயக்கத்தின் கமாண்டரோடு தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர்.
ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களை அவர் பகிர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
Comments