தொடர் கொள்ளையில் ஈடுபட்டு உல்லாசமாக வாழ்ந்து வந்த 6 கொள்ளையர்கள் கைது..!

0 1296

திருவாரூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு உல்லாசமாக வாழ்ந்து வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

வடபாதிமங்கலத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் பிரதாப் ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது அங்கிருந்த 4பேருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நட்பின் அடிப்படையில் இவர்கள் 6 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் திருவாரூர் மாவட்டத்தில்  திருத்துறைப்பூண்டி, ஆலிவலம் உள்ளிட்ட இடங்களில் வெளியூர் சென்று இருக்கும் நபர்களின் வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் செல்போன் சிக்னல் மூலம் இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 40சவரன் தங்கநகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments