"இந்தியாவில் தமிழகம்தான் மதுவுக்கு அடிமையானவர்கள்அதிகமுள்ள மாநிலம்.." - அண்ணாமலை..!

இந்திய மாநிலங்களில் மதுவுக்கு அடிமையானவர்கள் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கள்ளச்சாராய இறப்புகளை தடுக்கத் தவறியதாக தமிழக அரசைக் கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமனோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அண்ணாமலை, டாஸ்மாக்கை மூடுவது எப்படி என்பது குறித்தும் அதனால் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை எப்படி ஈடு செய்வது என்பது குறித்தும் 10, 15 நாட்களில் பாஜக சார்பில் வெள்ளை அறிக்கையை முதலமைச்சரை சந்தித்து வழங்க உள்ளதாகக் கூறினார்.
கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
Comments