இரு கைகளையும் இழந்த மாணவர் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

0 1665

கிருஷ்ணகிரி அருகே சிறு வயதில் மின்சாரம் தாக்கி இரு கைகளையும் இழந்த சிறுவன் தன்னம்பிக்கையுடன் போராடி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் எடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பாராட்டை பெற்றுள்ளார்.

சோக்காடி கிராமத்தை கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியின் மகனான க்ரித்தி வர்மா சிறுவயதில் வீட்டு மாடியில் விளையாடி கொண்டு இருந்த போது மின்கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி இருகைகளையும் இழந்தார். தந்தை  பிரிந்து சென்று விட்ட நிலையில் தாயின் அரவணைப்பில் படிப்பில் கவனம் செலுத்தினார். 

10-ம் வகுப்பு பொது தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து, பள்ளியிலேயே முதல் மாணவனாக திகழ்கிறார். க்ரித்தி வர்மாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் அவரது மேற்படிப்புக்கு தேவையான அனைத்து  வகையிலும் தமிழக அரசு துணை நிற்கும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments