சினிமா பாணியில் 'கார் சேஸிங்' எதுவும் நடக்கவில்லை.. ஹாரி-மேகன் குற்றச்சாட்டிற்கு டாக்சி ஓட்டுநர் மறுப்பு..!

0 1723

புகைப்படக்கலைஞர்கள் தங்களை 2 மணி நேரம் காரில் இடைவிடாமல் துரத்திவந்ததாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவர்களை டேக்சியில் அழைத்துச்சென்ற நபரோ அதனை மறுத்துள்ளார்.

நியூயார்க் நகரில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிய ஹாரி, மேகன் தம்பதியரை சுயேச்சை புகைப்படக்காரர்கள் ஏராளமான கார்களில் 2 மணி நேரத்திற்கு மேல் துரத்தியதாகவும், அதனால் ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்க இருந்ததாகவும் இளவரசர் ஹாரியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர்கள் பயணித்த டேக்சி ஓட்டுநர் சுக்சரன் சிங்கிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, 2 கார்களில்  புகைப்படக்காரர்கள் பின்தொடர்ந்ததாகவும், சினிமா பாணியில் சேஸிங் எல்லாம் நடக்கவில்லை எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments