பெண் தர மறுத்த அப்பெண்ணின் பெற்றோரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்ற இளைஞர் கைது..!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரம் அருகே பெண் தர மறுத்த அப்பெண்ணின் பெற்றோரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன்-கலையம்மாள் தம்பதியின் மகளை, பாரதி என்ற இளைஞர் பெண் கேட்டு சென்றுள்ளார்.
இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே பாரதி நாட்டு துப்பாக்கியால் இருவரையும் சுட்டு விட்டு தப்பி சென்று விட்டார்.
அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரமாக கடையம் கிராமத்தில் உள்ள காப்பு காட்டில் தேடுதல் வேட்டை மேற்கொண்டு இருந்த போலீசார், வனப்பகுதியில் உறங்கி கொண்டிருந்த பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர்.
Comments