அரை கிலோ புளிக்காக அடித்து நொறுக்கப்பட்ட மளிகைக்கடை.. தரமில்லாத புளியை மாற்றிதரக் கேட்ட வி.ஏ.ஓ. மீது தாக்குதல்

0 1176

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தரமில்லாத புளியை மாற்றி தரக்கேட்ட பெண் கிராம நிர்வாக அலுவலரை தாக்கியதால், அவரது உறவினர்கள் மளிகைக்கடை கடையை அடித்து நொறுக்கிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மார்க்கெட்டை அடுத்த வரகனேரியை சேர்ந்த VAO கலைவாணி சில தினங்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட்டில் இப்ராஹிம் என்பவரின் கடையில் அரைகிலோ புளி வாங்கியதாக கூறப்படுகிறது.

அதனை, சமையலுக்கு பயன்படுத்திய போது தரமற்றதாக இருந்ததால், கடைக்கு வந்த அவர் வேறு புளி மாற்றி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு இப்ராஹிம் அந்த புளி தன் கடையில் வாங்கியதல்ல எனக் கூறி மாற்றித்தர மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கடை ஊழியர்கள் கலைவாணியை கீழே தள்ளியதாக கூறப்படும் நிலையில், வீட்டிற்கு சென்றவர், இதுபற்றி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடைக்கு வந்த உறவினர்கள், ஊழியர்களை சரமாரியாக தாக்கியதுடன், கடையை அடித்து நொறுக்கி பொருட்களை அள்ளி வீசியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்கெட் காவல் நிலைய போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments