100 மணி நேரத்தில், 110 பதார்த்தங்கள்.. உலக சாதனை படைத்த நைஜீரிய பெண்..!

0 1343

நைஜீரியாவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், தொடர்ந்து நூறு மணி நேரம் சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். சமூகவியல் பட்டதாரியும், சமையல் கலை நிபுணருமான ஹில்டா பாஸே, உள்ளூர் உணவுகள், வெளிநாட்டு உணவுகள் என 100 மணி நேரத்தில் 110 உணவு வகைகளை சமைத்து காட்டினார்.

சமையல் கூடத்தை சுற்றிலும் திரண்ட பார்வையாளர்கள் ஹில்டாவை தொடர்ந்து உற்சாகப் படுத்திய வண்ணம் இருந்தனர்.

2019 ஆம் ஆண்டு, தொடர்ந்து 88 மணி நேரம் சமைத்து கின்னஸ் சாதனை படைத்திருந்த இந்திய பெண்மணி லதா டாண்டன், புதிய சாதனையாளர் ஹில்டா பாஸேக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments