நியூசிலாந்தில் 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதியில் தீ விபத்து.. 10 பேர் பலி..!

0 865

நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விடுதியிலிருந்

து மீட்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் அவசர சேவைகள் உதவி மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தின் போது விடுதியில் இருந்த 20 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

அவர்கள் என்ன ஆனார்கள் என்று தேடும் பணி நடைபெற்று வருகிறது. தங்கும் விடுதியின் 3-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் வெலிங்டன் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments