மகள் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல் தந்தை எடுத்த விபரீத முடிவு..!

0 1803

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் மகள் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.

தச்சு தொழிலாளியான ஆன்றணி அமல்ராஜூக்கு, சத்தியகலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த மாதம் 14ம் தேதி மகள்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைய மகள் ஸ்ரீலட்சுமி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

மகள் இறந்த துக்கத்தில் மதுபோதையில் ஆன்றணி அமல்ராஜ், மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதோடு, தானும் மகள் சென்ற இடத்திற்கே செல்வதாக கூறிவந்துள்ளார்.

கோபித்து கொண்டு சத்தியகலா மூத்த மகளுடன் தாய்வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், எனது உறுப்புகளை தானம் செய்துவிடுங்கள் என வாட்ஸ் அப்பில் உருக்கமாக பேசி மனைவிக்கு செய்தி அனுப்பிவிட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments