தீவிர சிகிச்சையில் கணவன்... மகளைக் கொன்ற தாய் தூக்கிட்டு தற்கொலை... அவரில்லாமல் வாழ முடியுமா?

0 1834

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவனின் உடல்நிலை மோசமடைந்ததால் விரக்தியடைந்த மனைவி தனது 12 வயது மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். மளிகைக் கடை நடத்தி வரும் நிலையில், ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதனால் மூளையில் ஏற்பட்ட பாதிப்பிற்காக சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஹெல்த் சென்டரில் ஏப்ரல் மாதம் 29ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மனைவி வெங்கட சுமலதா மற்றும் அவரது 12 வயதான மகள் மகன்னியா ஆகியோர் மருத்துவமனையின் தங்கும் விடுதியில் தங்கியிருந்து ஹரிகிருஷ்ணனை உடனிருந்து கவனித்து வந்தனர். எனினும், மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் ஹரிகிருஷ்ணன் ஆபத்தான கட்டத்திலே இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுமலதா மற்றும் மகன்னியா ஆகியோர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் கிடப்பதாக கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அங்கிருந்த சுமலதாவின் செல்போனை கைப்பற்றிய போது, அவரது சகோதரருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட வாய்ஸ் மெசேஜ்., நெட் Off-ல் இருந்ததால் Send ஆகாமல் இருந்தது தெரியவந்தது. அதில், கணவர் பிழைக்க மாட்டாரென மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். அவரில்லாமல் எங்களுக்கு வாழ பிடிக்கவில்லை அதனால் தற்கொலை செய்துக் கொள்கிறோம் என்று, அந்த ஆடியோ பதிவில் கூறியுள்ளார்.

மெசேஜ் அனுப்பி விட்டு துப்பட்டாவால் மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு தானும் மற்றொரு துப்பட்டாவால் தூக்கிட்டுக் கொண்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.

சிகிச்சையில் இருக்கும் கணவன் படும் அவஸ்தையை காண முடியாமல் மனைவி எடுத்த முடிவு அவரது கணவனுக்கும், குடும்பத்தினருக்கும் பெரிய வலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும் என்கின்றனர், மனநல மருத்துவர்கள்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments