கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் பலர் தோல்வி..

0 1946

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து ஹூப்ளி-தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

ராமநகரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் ஹூசைனிடம் தோல்வியடைந்தார்.

சித்தராமையாவை எதிர்த்து வருணா தொகுதியிலும், புத்தரங்க ஷெட்டியை எதிர்த்து சாமராஜநகர் தொகுதியிலும் போட்டியிட்ட அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சோமன்னா, இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.

பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி, சிக்மகளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments