கர்நாடகாவில் ஆட்சியமைக்கப்போவது யார்.? காலை 8 மணிக்கு துவங்குகிறது வாக்கு எண்ணிக்கை..!

0 1652

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு கடந்த 10ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன.

மொத்தம் 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும். பிற்பகலுக்கு மேல் வேட்பாளர்களின் வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை பெற்று ஆட்சியமைக்க பாஜக, காங்கிரஸ், ஜே.டி.எஸ். இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இதனிடையே, பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, மேலிடத் தலைவர்களுடன் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments