அமெரிக்க புகைப்படக் கலைஞர் எடுத்த நிலவின் மேற்பரப்பை துல்லியமாக காணக்கூடிய புகைப்படம்...!

0 2703

நிலவின் மேற்பரப்பை மிகத் துல்லியமாக ஜூம் செய்து காணக்கூடிய வகையில் புகைப்படம் ஒன்றை அமெரிக்க வானியல் புகைப்படக் கலைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

ஆன்ட்ரூ மெக்கர்த்தி என்ற அந்த புகைப்படக் கலைஞர் தமது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

2 தொலைநோக்கிகள் மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி 2 வார கால உழைப்பில் உருவாக்கப்பட்ட அந்த புகைப்படத்தின் மொத்த அளவு 1 புள்ளி 3 ஜிகா பிக்சல்களாக உள்ளது.

இத்தனைப் பெரிய புகைப்படத்தை பதிவிறக்கம் செய்தால், சாதாரண கணினிகள் உறைந்து நின்று போககக்கூடும் என்று ஆண்ட்ரூ மெக்கர்த்தி எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments