கணவரை விஷம் கொடுத்து கொன்று விட்டு அவர் மறைவால் அடைந்த வேதனை குறித்து புத்தகம் வெளியிட்ட குடும்ப குத்து விளக்கு..

0 2697

அமெரிக்காவில், கணவரின் மறைவால் அடைந்த மன வேதனையை புத்தகமாக வெளியிட்ட பெண், கணவரை விஷம் கொடுத்து கொலை செய்தது ஓராண்டிற்குப் பின் தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம், எரிக் ரிச்சின் என்பவர் மர்மமாக உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி கோரி அனைவரிடமும் தெரிவித்திருந்தார்.

கணவரின் இறப்பால் ஏற்பட்ட விரக்தி குறித்து புத்தகம் ஒன்றை எழுதி அவர் வெளியிட்டார். ஆனால், மனைவி கோரி தன்னை விஷம் கொடுத்து கொல்ல முயற்சிப்பதாக எரிக் இறப்பதற்கு முன் தெரிவித்து வந்ததாக அவரது நண்பர்களும், உறவினர்களும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இதன்பேரில் கோரியின் செல்போன் மற்றும் கணினியை போலீசார் சோதனையிட்டனர். அதில், போதை மருந்து வாங்கி, அதை மதுவில் அதிகளவில் கலந்து கொடுத்து எரிக்கை கொன்றதே கோரி தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து 33 வயதான கோரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments