அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் திடீர் தீ விபத்து..!

0 1065

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

நேற்று மாலை ஹூஸ்டன் புறநகர் பகுதியான டீர் பார்க்கில் உள்ள ரசாயன ஆலையின் ஒரு யூனிட்டில், தீப்பற்றியதில் வானுயர கரும்புகை எழுந்தது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் ஆலையில் இருந்த 5 ஊழியர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments