சூர்யவம்சம் இயக்குனர் விக்ரமன் வீட்டில் ஸ்கூட்டர் திருட்டு..! சட்டையை வச்சி மூடிகிட்டு போனாங்க..!

0 1972

சென்னையில் சூர்யவம்சம் திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு வந்த உறவினரின் இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருடப்பட்டதாக சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தை போல போன்ற ஏராளமான வெள்ளி விழா படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன்

சம்பவத்தன்று காலை அசோக் நகர் 53 வது தெருவில் உள்ள விக்ரமனின் வீட்டிற்கு உறவுக்கார பெண் ஒருவர் ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்றுள்ளார். விக்ரமனின் மனைவியை சந்தித்து விட்டு அந்த பெண் வெளியே சென்று பார்த்த போது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை காணவில்லை என்று கூறப்படுகின்றது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரு இளைஞர்கள் முகத்தை மூடியவாறு ஸ்கூட்டரை திருடிச்சென்றது தெரியவந்ததாக இயக்குனர் விக்ரமன் தெரிவித்தார்

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் , போலீசார் வாகனத்தை மீட்டுத்தருவார்கள் என்றும் விக்ரமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments