சிறையினுள் தாதா தில்லு தாஜ்புரியா கொலை தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!

0 2526

திகார் சிறையினுள், தாதா தில்லு தாஜ்புரியா கொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

டெல்லியின் முக்கிய தாதாவான தில்லு தாஜ்புரியா, கடந்த மே 2-ம் தேதி சிறையினுள் மற்றொரு ரவுடி கும்பலால் இரும்பு கம்பியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்ட காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

அக்காட்சி நேற்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இன்று அதுதொடர்பான இரண்டாவது சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது. அதில், தாக்குதலால் நிலைகுலைந்த தாஜ்புரியாவை சிறையின் மற்றொரு பகுதிக்கு போலீசார் இழுத்து வருவதும், மீண்டும் சிலர் கம்பியால் தாஜ்புரியாவை போலீசார் முன்னிலையிலேயே குத்துவதும் பதிவாகியுள்ளது. போலீசார் தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments