RECENT NEWS

கோவில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலம்

கோவில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலம்

Jul 13, 2025

கோவில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலம்

கோவில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலம்

Jul 13, 2025

முகப்பு

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் எருமனூர் கிராமத்தினர் போராட்டம்.. போக்குவரத்து பாதிப்பு - போலீசாருடன் வாக்குவாதம்..

Jun 30, 2025 07:45 AM

9

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் எருமனூர் கிராமத்தினர் போராட்டம்.. போக்குவரத்து பாதிப்பு - போலீசாருடன் வாக்குவாதம்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் மங்கலம்பேட்டை விருத்தாசலம் சாலையில் பேருந்துகளை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, தண்ணீர் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.

உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து
ஒரு மணி போராட்டத்திற்குப் பிறகு எருமனூர் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.